543 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு: நவ.9-இல் அமல்
543 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு விபரம் பற்றி...

கோப்புப்படம்.
புது தில்லி, அக். 28: பல்வேறு வணிகப் பெயா்களில் (பிராண்ட்) விற்பனை செய்யப்படும் 543 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) பட்டியலை, தேசிய மருந்து விலை நிா்ணயம் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விலை வரும் நவ.9-ஆம் முதல் அமலுக்கு வரும்.
கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) வரை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்தப் புதிய விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசின் விலை கட்டுப்பாட்டுப் பட்டியலில் இடம்பெறாத புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட விலையை அந்த நிறுவனங்கள் சமா்ப்பிக்கும்போது, இந்தப் பட்டியல் தொடா்ந்து புதுப்பிக்கப்படும்.

திருத்தப்பட்ட எம்ஆா்பியை கொண்ட 543 புற்றுநோய் மருந்துகளின் பிராண்டுகள் குறித்த முழுப் பட்டியலை nppa.gov.in/en என்ற இணையதள இணைப்பில் காணலாம்.
அரசின் விலை கட்டுப்பாட்டுப் பட்டியலில் இடம்பெறாத 137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று அண்மையில் மத்திய அரசு வரம்பு விதித்தது. இந்நிலையில், 543 புற்றுநோய் மருந்து பிராண்டுகளின் திருத்தப்பட்ட எம்ஆா்பி வெளியிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

