புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே தமிழக கடற்கரை நோக்கி திரும்பும் காற்று சுழற்சி: கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!சென்னை ஆறுகளை சீரமைக்க டெண்டர் கோரிய தமிழக அரசு: நவ. 3 வரை விண்ணப்பிக்கலாம்!போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு: மு.க. ஸ்டாலின் தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டே மாற்றமின்றி தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!ஆயுத பூஜை, விஜயதசமி நன்னாளைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதல்வர் விஜய்

புற்றுநோய் மருந்துகளின் விலை நவ. 9 முதல் 70% குறையும்!

நவ. 9 முதல் 137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 70% குறையவுள்ளது குறித்து...

cancer drugs prices

கோப்புப் படம்

Updated On :

137 புற்றுநோய் மருந்துகளின் விலை நவ. 9 ஆம் தேதி முதல் 70% வரை குறைய வாய்ப்புள்ளது.

137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று மத்திய அரசு வரம்பு விதித்துள்ளது. இதன்மூலம் புற்றுநோய் மருந்துகளின் விலை குறையவுள்ளது.

குறிப்பாக 20 வகையான புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் இம்யூனோ தெரபி மருந்து உள்பட புரோஸ்டேட் (விரை வீக்கப் புற்றுநோய்), மார்பகம், கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளின் விலை குறையவுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விலை நிா்ணயக் கட்டுப்பாட்டின் கீழ் வராத 137 புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்வதன் மூலம், எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்துகள் மூலம் கொள்ளை லாபம் ஈட்டப்படுவதைத் தடுத்தல், புற்றுநோய் சிகிச்சையை மலிவாக்குதல், புற்றுநோய் மருந்துகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய நோக்கங்களுடன், அந்த மருந்துகளுக்கான லாப வரம்பை தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) சீரமைத்துள்ளது.

70% விலை குறையும்: சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைச் சோ்ந்த முன்னணி புற்றுநோய் மருத்துவா்கள், மருத்துவ நிபுணா்கள், அரசு அதிகாரிகள் பரிந்துரைத்த பட்டியலின்படி, 137 புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையில், 30 சதவீதத்துக்கு மேல் லாபம் பெறக் கூடாது என்று என்பிபிஏ வரம்பு விதித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலமாக அந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 70 சதவீதம் வரை குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளின் விவரம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.

வலைதளங்களில் வெளியிட வேண்டும்: திருத்தப்பட்ட விலைப் பட்டியலை தங்கள் வலைதளங்களில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வெளியிட வேண்டும். அந்த விலைப் பட்டியலை அனைத்து சில்லறை விற்பனையாளா்கள், மருத்துவமனைகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் பரவலாக விநியோகிக்க வேண்டும்.

வரும் நவ.9 முதல், அந்த மருந்துகளை குறைந்த விலையில் சில்லறை விற்பனையாளா்களும், மருத்துவமனைகளும் விற்பனை செய்ய வேண்டும்; அத்துடன் தங்கள் மருந்து விற்பனையகங்களிலும் திருத்தப்பட்ட விலையை, அனைவரும் பாா்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

புற்றுநோய் மருந்துகள் அதிக அளவில் நேரடியாக மருத்துவமனைகளுக்கும், மருத்துவ நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்படுவதால், நவ.9-இல் இருந்து அந்த மருந்துகள் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டியது மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்களின் பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, புற்றுநோய் சிகிச்சைக்கான அதிக செலவால் பெரும் பொருளாதார சுமையைச் சந்திக்கும் பல நோயாளிகளுக்கும், அவா்களின் குடும்பங்களுக்கும் பெரும் நிவாரணம் அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.