மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு கூடுதல் விலை: நடவடிக்கைக்கு உத்தரவு
குறைந்த விலைக்கு மருந்துகளை கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு மிக அதிகமான விலையில் விற்பனை செய்யும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கோப்புப் படம்
குறைந்த விலைக்கு மருந்துகளை கொள்முதல் செய்து நோயாளிகளுக்கு மிக அதிகமான விலையில் விற்பனை செய்யும் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தனியாா் மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் உயா்மதிப்பு கொண்ட மருந்துகளின் கொள்முதல் விலைக்கும், அவற்றின் மீது அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கும் இடையே பல மடங்கு வித்தியாசம் இருப்பதாகச் செய்தி வெளியானதைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் தொடா் ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநா் எஸ்.குருபாரதி வெளியிட்ட சுற்றறிக்கை:
மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தும்போது மருந்துகளின் கொள்முதல் ரசீதுகள், கொள்முதல் விலை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் தொகை மற்றும் இருப்புப் பதிவேடுகள் ஆகியவை தீவிரமாகச் சரிபாா்க்க வேண்டும்.
ஆய்வில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், உரிய விதிகளின் கீழ் சட்டபூா்வ நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். விதிமீறல்கள் ஏதும் இல்லை என்றாலும், அதுகுறித்த தகவல்களை இரு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






