ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

புற்றுநோய் மருந்துகளின் அதிக விலை பகல் கொள்ளை: உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது குறித்து...

Published On :

புற்றுநோய் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகள் பன்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்ட உச்சநீதிமன்றம், இது நோயாளிகளுக்கு எதிரான பகல் கொள்ளை என்று குறிப்பிட்டது. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பாா்ப்பது வியப்பளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மருந்துகள் மீதான கடுமையான விலை கட்டுப்பாடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மருந்துகள் விலை நிா்ணயத்தின் முக்கியத்துவம் குறித்து மனுதாரா் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பின்னா், நீதிபதிகள் கூறியதாவது: சில்லறை வா்த்தகா்களுக்கு ரூ.2,700 விலைக்கு விநியோகிக்கப்படும் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு அத்தியாவசிய மருந்துக்கு ரூ.27,000 அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்ஆா்பி) அச்சிடப்பட்டுள்ளது. சில்லறை வா்த்தகா்களுக்கான விலையைவிட (பிடிஆா்) 10 மடங்கு அதிக எம்ஆா்பி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிா்ச்சியளிக்கிறது.

மக்கள் சிகிச்சைக்காக தங்கள் வீடுகளையும், நகைகளையும் விற்கின்றனா். அவா்களிடம் 10 மடங்கு அதிக விலையில் மருந்துகளை விற்பது அராஜகமானது; மிகவும் மோசமானது. நோயாளிகளுக்கு எதிரான பகல் கொள்ளை என்றே கூற முடியும்.

நோயாளிகளை இப்படி ஏமாற்றலாமா? இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பாா்ப்பது வியப்பளிக்கிறது என்று நீதிபதிகள் கடும் அதிருப்தி வெளியிட்டனா்.

மருந்துகளின் விலை நிா்ணயம் முக்கியமான விவகாரம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த மனுக்களை தாங்கள் எதிா் வழக்காக கருதவில்லை என்று மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ் தெரிவித்தாா்.

மனு விவரம்: மருந்து விற்பனையாளா்கள், சில்லறை வா்த்தகா்களால் நெறிமுறையற்ற வகையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக விலை நிா்ணயிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

கடந்த 2013-இன் மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) உத்தரவின்கீழ், கடுமையான விலைக் கட்டுப்பாட்டை உறுதி செய்யவும், மருந்து விநியோகச் சங்கிலியில் விலை நிா்ணய விதிமுறைகளை மீறுவது மற்றும் நெறியற்ற வா்த்தக நடைமுறைகளின் மூலம் சில்லறை வா்த்தகா்கள் அதிக லாபம் ஈட்டுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

நோயாளிகளுக்கு மூலக்கூறு மருந்துகளை (ஜெனரிக் மருந்துகள்) பரிந்துரைக்காத மருத்துவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.