அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு; குறிப்பாக 3 வாரத்தில்
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு; குறிப்பாக 3 வாரத்தில்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு; குறிப்பாக 3 வாரத்தில்

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது,
Published on


வாஷிங்டன்: கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது, கடந்த 3 வாரங்களாக, நாள்தோறும் புதிய பாதிப்பு இரண்டு மடங்கு அதிகமாக பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்டா வகை உருமாறிய கரோனா தொற்றுப் பரவல், தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டிருக்கும் மெத்தனம், ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மிகப்பெரிய கூட்டம் போன்றவை, இதற்குக் காரணங்களாக அமைந்துவிட்டன.

கடந்த ஜூன் 23ஆம் தேதி நாள்தோறும் கரோனா பாதிப்பு 11,300 ஆக இருந்த நிலையில், அதுவே கடந்த திங்கள்கிழமை 23,600 ஆக உயர்ந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் தற்போது 55.6 சதவீத மக்கள் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதில், டெல்டா வகை கரோனாவின் தாக்கம் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கும், கரோனா பரவல் அதிகரிப்பதும், எதிர்பாராமல் ஒரேவேளையில் நடக்கும் நிகழ்வாகவே இருக்கலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com