விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை புறக்கணித்த பிரிட்டன்

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டனில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை புறக்கணித்த பிரிட்டன்

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டனில் இன்று (திங்கள்கிழமை) அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவி வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டனில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

இரவுநேர விடுதிகளை மீண்டும் திறக்கவும், எந்த வித கட்டுப்பாடுகளின்றி திரையரங்கு உள்ளிட்டவற்றை திறக்கவும் நேற்று இரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து பணி செய்வது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "இப்போது, இதை செய்யவில்லையெனிலும், இலையுதிர் காலத்திலும் குளிர்காலத்திலும் திறந்துதான் ஆக வேண்டும். குளிர்காலம் என்பதால் அப்போது வைரஸ் பரவும் அபாயம் அதிகம் இருக்கும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை விமர்சித்துள்ள தொழிலாளர் கட்சி சுகாதார செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் அஷ்வொர்த், அரசு பொறுப்பற்று செயல்படுவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஒரு நாளுக்கு 50,000 பேர் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். எனவே, தளர்வுகளை திரும்பபெறக்கூடாது என விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com