அலுவலகத்திற்கு செல்வதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்: சுந்தர் பிச்சை

குகூள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

குகூள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலுக்கு மத்தியில் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்து பணிபுரியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் குறைந்துள்ளது.

இந்நிலையில், குகூள் நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலைப்பதிவில், "டெல்டா வகை கரோனா பரவல் அதிகரித்துவருவது அலுவலகம் திரும்புவதை சிக்காலாக்கியுள்ளது.

எனவே, வீட்டிலிருந்து பணிபுரிவது அக்டோபர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் திரும்ப எவரேனும் விரும்பினால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஒரிரு வாரங்களில், இந்த முறை அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. வரும் மாதங்களில் மற்ற நாடுகளுக்கும் இது விரிவு செய்யப்படவுள்ளது.

அந்தந்த நாடுகளின் தடுப்பூசி கையிருப்பின் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் அனைவருக்கும் மன அமைதியை ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com