உலகளவில் கரோனா பாதிப்பு 16.31 கோடியைத் தாண்டியது: பலி 33.83 லட்சமாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.31 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 33.83 லட்சமாக அதிகரித்துள்ளது. 
உலகளவில் கரோனா பாதிப்பு 16.31 கோடியைத் தாண்டியது: பலி 33.83 லட்சமாக அதிகரிப்பு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.31 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 33.83 லட்சமாக அதிகரித்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே மாதத்தில் உலகையே அச்சுறுத்த தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, ஒரு ஆண்டுக்கும் மேலாக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது தொற்றோரின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது.  உலகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,31,69,300-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 33,83,265 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 14,14,66,636 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,83,19,399 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,02,953 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,36,95,916    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 99 ஆயிரத்து 863-ஆக உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,46,83,065-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 2,70,319 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,55,90,613 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் 4,34,852 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com