
இஸ்லாமாபாத்: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாக நடைபெறுவதால், பாகிஸ்தானில் கரோனா ஐந்தாவது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்
ஓரளவுக்கு பாகிஸ்தான் அரசு கரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது. ஆனல், பாகிஸ்தானில் இன்னமும் பல லட்சக்கணக்கான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தாமல்தான் உள்ளனர் என்று பிரதமரின் உடல்நலம் தொடர்பான சிறப்பு உதவியாளர் டாக்டர் ஃபைசல் சுல்தான் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்காவிட்டால், நாட்டில் கரோனா ஐந்தாவது அலை எழக் கூடும்என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுவரை நாட்டில் 26 சதவீத மக்கள் கரோனா தடுப்பூசியை முற்றிலும் செலுத்திக் கொண்டுள்ளனர். 20 சதவீதம் பேர் முதல் தவணையை மட்டும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.