'வறட்டு இருமல், காய்ச்சல், வியர்வை, உடல் வலிதான் ஒமைக்ரான் அறிகுறி'

ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது முதலே, நாள்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் அறிகுறிகள் என்னென்ன: தென்னாப்ரிக்க மருத்துவர் விளக்கம்
ஒமைக்ரான் அறிகுறிகள் என்னென்ன: தென்னாப்ரிக்க மருத்துவர் விளக்கம்

ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்காவில், கரோனாவின் பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது முதலே, நாள்தோறும் புதிய பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கௌடெக் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பொது நல மருத்துவராக பணியாற்றி வருகிறார் டாக்டர். அன்பென் பிள்ளே. இங்குதான், புதிய கரோனா பாதிப்பு கிட்டத்தட்ட 81 சதவீதம் பதிவாகியுள்ளது. கடந்த 10 நாள்களில், புதிய கரோனா பாதிப்பு, கணிசமாக அதிகரித்திருப்பதாக அவர் கூறுகிறார்.

இதுவரை கரோனா பாதித்து சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு மிக லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன. பெரும்பாலும் வறட்டு இருமல், காய்ச்சல், இரவு நேரத்தில் அதிக வியர்வை, உடல் வலிதான் ஒமைக்ரான் அறிகுறிகளாக உள்ளன. 

அதிலும், கரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். தடுப்பூசி போடாதவர்களை விடவும், தடுப்பூசி போட்டவர்களுக்கு அறிகுறிகள் குறைவாகவே உள்ளன.

குறிப்பாக, தென்னாப்ரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுடையவர்களாகவே இருப்பதாகவும், இந்த வயதினருக்கு பொதுவாகவே கரோனா அறிகுறி குறைவாகவே இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

நியூயாா்க்/ஜெனீவா: புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியின் தீவிரத்தை அறிந்துகொள்வதற்கு பல வாரங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

அதிகமாகப் பரவக்கூடியதா அல்லது டெல்டா வகை தீநுண்மி உள்ளிட்ட பிற வகைகளைப் போல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதா என்பது குறித்து இன்னமும் தெளிவாகத் தெரியவரவில்லை எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள புதிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஒமைக்ரான்’ என கடந்த நவ. 26-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு பெயரிட்டது. மேலும், கவலைக்குரிய வகையைச் சோ்ந்ததாக ஒமைக்ரான்னை வகைப்படுத்தியது.

இதையடுத்து, உஷாரடைந்த உலக நாடுகள் பலவும் தென் ஆப்பிரிக்காவுக்கான பயணத் தடையை விதிக்கத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com