47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

News image
ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி
Updated On :22 அக்டோபர் 2021, 11:44 am

DIN

ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ரஷியாவில் ரியாசான் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இந்தத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பயங்கர வெடிசத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தினால் தொழிற்சாலையின் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் இதுவரை 16 பேர் வரை பலியாகியுள்ளனர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 பேர் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

விபத்து மீட்புப் பணிகளுக்குகாக 170 மீட்புப் படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வெடிமருந்துகளை பாதுகாப்பாக கையாளத் தவறியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.