
ககரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியப் பயணிகளுக்கு புதியக் கட்டுப்பாடுகளை துருக்கி அரசு விதித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி: மத்திய சட்டத்துறை அமைச்சர்
அந்த வரிசையில் துருக்கிக்கு வரும் இந்தியப் பயணிகள் அவசியம் கரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தியப் பயணிகள் மற்றும் பயண தேதிக்கு 14 நாள்களுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்த ஆணை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | டெஸ்ட் தொடர்: மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஜார்வோ கைது
மேலும் பயணிகள் தங்களை 14 நாள்களுக்கு கட்டாயத் தனிமையில் ஈடுபடுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.