உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணாவை கெளரவிக்கும் வகையில் இந்திய வழக்கறிஞர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்து கொண்டார். அப்போது, இந்திய நீதித்துறை சாமானிய மனிதனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ரிஜிஜு, நாட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து பேசும்போது, "நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவகாரத்தை மக்கள் நீதிமன்றத்தில் எழுப்பிவருகின்றனர்.
நாம் அவசரமாக பார்க்க வேண்டியது கீழமை நீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள். பின் தங்கிய கிராமப்புற பகுதிகளிலிருந்து வரும் மக்கள், நீதிக்காக அனைத்தையும் தர வேண்டியுள்ளது. சில நேரங்களில், நிலங்கள், சொத்துகளைக் கூட விற்கின்றனர்.
நீதி தாமதிக்கப்பட்டால், அது நமது செயல்பாடுகள் குறித்து எழுப்பப்படும் கேள்வியே ஆகும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. தொலைதூரத்தில் உள்ள சாமானியனுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகிறது" என்றார்.
பின்னர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குறித்து பேசிய அவர், "என்ன செய்ய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரியாக செய்துவருகிறார். ரமணா நீதித்துறைக்கு புதிய விடிலை தருவார்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



