சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

சொத்து தகராறில் கொலை மிரட்டல்: 10 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சொத்துத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கோப்புப் படம்

Updated On :

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சொத்துத் தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பழனியை அடுத்த நல்லாம்பாளையத்தில் மக்புநிஷாவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்தின் சில பகுதியை மீன்கடை, செங்கல் சூளைக்கு வாடகைக்கு விட்டுள்ளாா்.

இந்த நிலையில், மக்புநிஷாவுக்கும், இவரது உறவினா் ஆயிஷா குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப் பிரிப்பது தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு ஆயிஷா, இவரது மகன் காஜாமைதீன் உள்ளிட்ட 10 போ் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு வந்து மீன் கடை, செங்கல் சூளை, தொழிலாளா்கள் தங்கும் வீடு என அனைத்தையும் இடித்து தள்ளி, அங்கிருந்தவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து பழனி காவல் நிலைய போலீஸாா் காஜா மைதீன், ஆயிஷா உள்ளிட்ட 10 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.