கரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்ட ரஷிய அதிபா் புதின்

ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால், அதிபர் விளாதீமிர் புதின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

ரஷிய அதிபா் மாளிகை ஊழியர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டதால், அதிபர் விளாதீமிர் புதின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த வார இறுதியில் தஜிகிஸ்தானுக்கு அதிபர் புதின் மேற்கொள்ள இருந்த பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட செய்தியில்,

“தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரக்மானை தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் பயணம் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்தார்.” 

ஏற்கனவே ரஷிய தயாரிப்பு கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி இரண்டு தவணையும் ரஷிய அதிபர் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com