
ஜப்பானிய பெண் விஞ்ஞானியின் பிறந்தநாளையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய வேளாண் விஞ்ஞானி மற்றும் உயிர்வேதியியலாளரான மிச்சியோ சுஜிமுரா, 1888ல் பிறந்தார். இவர், பல்வேறு வேளாண் பொருள்கள் குறித்து ஆய்வு செய்தவர். குறிப்பாக கிரீன் டீ குறித்த ஆய்வினை மேற்கொண்டு அதில் உள்ள நன்மைகளை ஊட்டச்சத்துகளை கண்டறிந்து உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்.
ஜப்பானில் விவசாயத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1969ல் தன்னுடைய 80 வயதில் மறைந்தார்.
மேலும் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ள அவருக்கு இன்று (செப்.8) 133 ஆவது பிறந்தநாள். இதையடுத்து, அவரை நினைவுகூறும் பொருட்டு, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.