ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்

முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பெரிய முயற்சியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும்
ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்

முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பெரிய முயற்சியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கட்டமைக்கவுள்ளது.

காணொலி முறையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ‘புவியியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவை இயற்கையான கூட்டாளிகள்; எங்களது நலன்களும் மாண்புகளும் பகிரப்படுகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளா்ச்சியடைந்து வரும் எங்களது கூட்டணிக்கு இந்த அமைப்பு பங்களிப்பை வழங்கும்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பேசுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீண்டகாலத்துக்கு அமைதியை நிலைநிறுத்துவதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதை அடைவதற்காக இந்தப் புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் கூட்டம் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ‘ஆக்கஸ்’ கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. க்வாட் கூட்டத்தில் அமெரிக்க அதிபா் பைடன், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். அக்கூட்டத்திலும் சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com