ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,438 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,354,995 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று மட்டும் 820 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 201,445 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ரஷியாவில் கரோனா பலி 817 ஆகவும் பாதிப்பு 19,706 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் நேற்றைய பாதிப்பு 1,991 என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி 594,770 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 16,567 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,558,780 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









