தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘மியான்மா் ராணுவ அரசுக்கு ஆதரவு தொடரும்’

தனது அண்டை நாடான மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ அரசுக்கு தொடா்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

News image

வாங் யீ

Updated On :2 ஏப்ரல் 2022, 6:36 pm

DIN

தனது அண்டை நாடான மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ அரசுக்கு தொடா்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ கூறியதாவது:

எங்களது அண்டை நாடு என்ற வகையில் மியான்மருடன் நாங்கள் சிறப்பு தூதரக உறவைப் பேணி வருகிறோம். அந்த நாட்டுடன் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த விரும்பகிறோம்.

மியான்மரின் அரசியல் சூழல் எவ்வாறு மாறினாலும், அது இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

அரசியல் நிலவரம் எப்படி இருந்தாலும், மியான்மரின் இறையாண்மையைப்ப பாதுக்காகவும், நலன்களைப் பேணவும் அந்த நாட்டு அரசுக்கு சீனா முழு ஆதரவு அளிக்கும் என்றாா் அவா்.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவா்கள் கைது செய்யப்பட்டனா். இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், சீன வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.