ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாக். நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

​பாகிஸ்தானில் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கொசீருக்கு  எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். 

News image
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் சபாநாயகர் (கோப்புப்படம்)
Updated On :3 ஏப்ரல் 2022, 7:19 am

DIN


பாகிஸ்தானில் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கொசீருக்கு  எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். 

100-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதுபற்றி ஜியோ செய்திகளுக்கு தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

"சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முன்வடிவு எதிர்க்கட்சிகளின் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முன்வடிவில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஒரு சார்புடையவர்களாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கட்சிப் பதவிகளிலிருந்து இருவரும் ராஜிநாமா செய்யாமல் விதிகளை மீறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.