பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

உக்ரைன் பொதுமக்கள் மீது தாக்குதல்: ஜப்பான் கண்டனம்

உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயல், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறினார். 

Published On :

கிவ் புறநகர்ப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயல், வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, 

உக்ரைன் நகரங்களில் தெருக்களில் கிடக்கும் உடல்கள் மற்றும் சிலர் கைகள் பின்னால் கட்டியிருப்பது போன்ற புகைப்படங்களைக் கண்டு ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே கண்டித்துள்ளனர். 

ரஷியாவிற்கு எதிராகக் கூடுதல் தடைகளில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்கும் அதேவேளையில், ஜப்பான் என்ன செய்ய வேண்டும் என்பதை உறுதியாகச் செயல்படுத்தும்.

சர்வதேச சட்டத்தை மீறும் மனித உரிமைகள் பிரச்னைகள் மற்றும் செயல்களை நாம் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். 

அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்ப ஜப்பான் ரஷியாவிற்கு எதிராகத் தொடர் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.