மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜிநாமாவை ஏற்றார் அதிபர்

மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்த நிலையில், அவர்களது ராஜிநாமாவை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஏற்றுக் கொண்டார்.

News image

இலங்கையில் 26 அமைச்சர்களின் ராஜிநாமாவை ஏற்றார் அதிபர்

Updated On :4 ஏப்ரல் 2022, 10:26 am

கொழும்பு: இலங்கையில் பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்த நிலையில், அவர்களது ராஜிநாமாவை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஏற்றுக் கொண்டார்.

இலங்கை அமைச்சர்கள் ராஜிநாமா கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அமைச்சர்களின் ராஜிநாமா கடிதத்துடன், அதிபர் கோத்தபய ராஜபட்சவை பிரதமர் மகிந்த ராஜபட்ச இன்று சந்தித்தார். அப்போது அமைச்சர்களின் ராஜிநாமாவை அதிபர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, உணவுப் பொருள்களுக்கு பற்றாக்குறை என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 36 மணி நேர ஊரடங்கும் சனிக்கிழமை மாலை முதல் அமலுக்கு வந்து இன்று காலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

அவசரநிலை மற்றும்  ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளையும் மீறி இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் வெடித்தது. 

இதற்கிடையே இலங்கையின் பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்ததாக ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் வெளியாகின. இதை மறுத்த பிரதமா் அலுவலகம், இந்தத் தகவல்கள் தவறானவை எனவும், அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் தங்கள் பதவியை ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.

இதுதொடா்பாக, தலைநகா் கொழும்பில் கல்வித் துறை அமைச்சராக இருந்த தினேஷ் குணவா்த்தன செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமைச்சா்கள் அனைவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை பிரதமா் மகிந்த ராஜபட்சவிடம் ஒப்படைத்துள்ளனா்’’ என்று தெரிவித்தாா். எனினும் அவா்கள் ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை அவா் தெரிவிக்கவில்லை.

பிரதமரின் மகனும் பதவி விலகல்: பிரதமா் மகிந்த ராஜபட்சவின் மகனும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபட்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.