பிரிட்டனில் 11 வயதில் உறங்கி, 21 வயதில் விழித்தவர்: நம்பமுடியவில்லையா?

11 வயதில் உறங்கிய சிறுமி ஒருவர், சரியான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது 21-வது வயதில் விழித்துள்ளார். இதை நம்ப முடியவில்லையா? வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பிரிட்டனில் 11 வயதில் தூங்கி, 21 வயதில் விழித்தவர்: நம்பமுடியவில்லையா?
பிரிட்டனில் 11 வயதில் தூங்கி, 21 வயதில் விழித்தவர்: நம்பமுடியவில்லையா?
Published on
Updated on
1 min read


பிரிட்டனில், தனது 11 வயதில் உறங்கிய சிறுமி ஒருவர், சரியான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது 21-வது வயதில் விழித்துள்ளார். இதை நம்ப முடியவில்லையா? வாருங்கள் என்னவென்று பார்க்கலாம்.

19ஆம் நூற்றாண்டு என்பது உலகம் முழுக்கவே மருத்துவத் துறை, நவீன வளர்ச்சியை கண்டது என்று சொன்னால் அது மிகையில்லை. மருத்துவத்துறையுடன் சேர்ந்து தொழில்புரட்சிகளும் உண்டானது.

ஆனால், இவற்றுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுதான் டிரைபானோசோமியாசிஸ் எனப்படும் உறக்க வியாதி. 

11 வயதாக இருந்த எலன் ஸேட்லர் என்ற சிறுமிக்கு இந்த பிரச்னை ஏற்பட்டது. இவர் 1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பிறந்தவர்.  அதுவும் 12 குழந்தைகளைக் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில். இவரது தந்தையோ ஒரு விவசாயி. மிக இளம் வயதிலேயே விபத்து ஒன்றில் காலமானார். எலனின் தாய், மறுமணம் செய்து கொண்டார்.

1871ஆம் ஆண்டு வரை எலனுக்கு எந்த குறையும் இல்லை. திடீரென 11 வயதிருக்கும் போது எலன் ஒரு நாள் இரவு உறங்கி, மறுநாள் காலையில் கண்விழிக்கவே இல்லை. அவரை பலரும் எழுப்பிப் பார்த்தனர். பயனில்லை.

இந்த தகவல் காட்டுத் தீயாகப் பரவியது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் எலன் வீட்டுக்கு வந்து அவரை எழுப்ப முயற்சித்தனர். எதுவும் பலனளிக்கவில்லை.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் உறக்கத்திலிருந்து எழுப்ப மூளைக்குத் தேவையான ஒரேக்ஸின் என்ற வேதிப்பொருள் உருவாகவில்லை. அதனால்தான் அவர் கண்விழிக்கவில்லை என்பதை மட்டுமே கண்டறிந்தனர். ஆனால் கண் விழிக்க வைக்க ஒரு உபாயமும் இல்லை.

இப்படியே நாள்கள் அல்ல ஆண்டுகள் சென்றன. ஒரு நாள் 1880ஆம் ஆண்டு எலனின் 21-வது வயதில் அவர் திடீரென உறக்கத்தைக் களைத்தார். ஆனால் அவரது தாய் அதற்கு முன்பே காலமாகியிருந்தார்.

மீண்டும் எலன் இப்படி தூங்கிவிடுவாரோ என்று பயப்படாமல், எலன் தனது திருமணம் செய்து கொண்டார். ஒரு விவசாயியை திருமணம் செய்து கொண்டு 6 பிள்ளைகளுக்குத் தாயானார். 1901ஆம் ஆண்டு அவர் காலமானார். அவரது பிள்ளைகளில் ஒருவர் தனது தாயைப் பற்றிய இந்த தகவலை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com