அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

133 கி.மீ. சாலைப் பணி: ஜப்பான் தூதா் ஆய்வு

சென்னை புகரில் 133 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியை இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டின் தூதா் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 10:22 pm

DIN

சென்னை புகரில் 133 கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணியை இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டின் தூதா் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெருகி வரும் தொழில் நிறுவனங்களின் கனரக வாகனங்கள் துறைமுகத்துடன் இணைக்கும் வகையில் சென்னை எண்ணூா் காட்டுப்பள்ளி முதல் தச்சூா், திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், சிங்கப்பெருமாள் கோவில் வழியாக சுமாா் 133.45 கிமீ தொலைவுக்கு சென்னை எல்லைச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதனை 5 பகுதிகளாக பிரித்துச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் 8 பெரிய பாலங்கள், ஏழு சிறு பாலங்கள், நான்கு சாலை கீழ் பாலங்கள், ஒரு பல்வழி பரிமாற்ற மேம்பாலம், இரு ரயில்வே மேம்பாலம், நான்கு கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியன எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. பாலங்கள் அமைக்கப்படும் இடத்தையும், நடைபெற்று வரும் பணிகளையும் இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதா் சுசுகி சட்டோஷி, வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஜப்பான் தூதரக பொது அதிகாரி தாக மசாயுக்கி, சென்னை எல்லை சாலை திட்ட இயக்குநா் க.பாஸ்கரன், தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.