பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.
அதன்படி இன்று(ஏப்ரல் 9) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், காலை 11.30 மணி நிலவரப்படி, இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எதிர்க்கட்சிகள் விவாதம் ஏதுமின்றி வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.
இதையும் படிக்க | கடைசி வரை போராடுவேன்: இம்ரான் கான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அலீஷா ஹீலிக்கு இந்திய மகளிர் மரியாதை..! ஓய்வுக்கு முன்பாக சதம்!

ஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு

ஈரான் போர்: கோவை - அபுதாபி விமான சேவை ரத்து

கிண்டூர் டூ தெஹ்ரான்! ஈரானின் முதல் தலைமை மதகுரு ஓர் இந்திய வம்சாவளியா?
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

