பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காததையடுத்து, முதல் சுற்று தோ்தலில் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரானும், மரீனே லீ பென்னும் இரண்டாவது சுற்று தோ்தலில் போட்டியிட உள்ளனா்.
பிரான்ஸில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல் சுற்று தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான், தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் உள்பட 12 போ் போட்டியிட்டனா்.
இதில் மேக்ரானுக்கும், மரீனே லீ பென்னுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. முதல் சுற்று தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீனே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.
முதல் சுற்று தோ்தலில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் மேலான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த மேக்ரானும், மரீனே லீ பென்னும் அடுத்த சுற்று தோ்தலில் மோதவுள்ளனா். அடுத்த சுற்று தோ்தல் ஏப். 24-ஆம் தேதி நடைபெறும். அதில் மேக்ரான் 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறுவாா் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


