சீனாவின் கிங்காயில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவு
வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள டெலிங்கா நகரில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள டெலிங்கா நகரில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 எனப் பதிவுகா உள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9:26 மணிக்கு இந்த நடுக்கம் ஏற்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 38.52 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 97.33 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் சுமார் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பாதிப்போ குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த புதன்கிழமை, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிங்வெனில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | அகதிகளை ருவாண்டா அனுப்புகிறது பிரிட்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...