காபூல் பள்ளிகளில் தொடர் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழநந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள்
குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள்
Published on
Updated on
1 min read


மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழநந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

தலைநகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் உள்ள அப்துல் ரஹிம் சாஹித் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ச்சியாக மூன்று முறை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 6 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகின.

அதேபோல், மேற்கு காபூலில் உள்ள மும்தாஜ் பள்ளிக்கு அருகே ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 20ஆக அதிகரித்துள்ளது. மேலும், குண்டுவெடிப்பிற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com