நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இலங்கை துப்பாக்கிச்சூடு குறித்து பாரபட்சமின்றி விசாரணை: மஹிந்த ராஜபட்ச

இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபட்ச, இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 7:21 am

இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபட்ச, இந்த சம்பவம் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். 

விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையின் ரம்புக்கனையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபட்ச, 'ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்தினால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுதொடர்பாக கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இலங்கை காவல்துறையினர் மக்களுக்கு மிகுந்த மிகுந்த மரியாதையுடன் சேவை செய்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மரியாதையுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.