புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரஷியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணை சோதனை வெற்றி

உக்ரைனில் ரஷியப் படைகளின் தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷியா அறிவித்துள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:39 am

மாஸ்கோ: உக்ரைனில் ரஷியப் படைகளின் தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மாட் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக ரஷியா அறிவித்துள்ளது.

இந்த ஏவுகணை மாஸ்கோ நேரப்படி புதன்கிழமை 15:12 மணிக்கு வடமேற்கு ரஷியாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்லெசெட்ஸ்க் காஸ்மோட்ரோமில் இருந்து ஏவப்பட்டதாகவும், இந்த ஏவுகணை நாட்டின் அணுசக்தி படைகளின் போர் ஆற்றலை கணிசமாக அதிகரிக்கும் என்றும் சர்மாட் உலகின் மிக நீண்ட தூர இலக்குகளை அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்மாட் சோதனைக்குப் பிறகு பேசிய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், புதிய ஏவுகணை "மிக உயர்ந்த தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் எதிர் ஏவுகணை தாக்குதலை தவிர்க்கும் வகையில் அனைத்து நவீன வழிமுறைகளையும் சமாளிக்கும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ளது." இது ரஷியாவின் அடுத்த தலைமுறை ஏவுகணைகளில் ஒன்றாக உள்ளது என்றார்.  

மேலும், சர்மாட் ரஷிய ஆயுதப் படைகளின் போர் திறனை பலப்படுத்தும், வெளிப்புற அச்சுறுத்தல்களிலிருந்து ரஷியாவை பாதுகாக்கும், ரஷியா மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்த நினைப்பவர்களை இனி இரு முறை சிந்திக்க வேண்டும் என்று புதின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.