இலங்கையில் எரிவாயு உருளை விலை ரூ.5,175 ஆக உயர்வு
இலங்கையில் எரிவாயு உருளை விலை ரூ.5,175 ஆக உயர்வு

இலங்கையில் எரிவாயு உருளை விலை ரூ.5,175 ஆக உயர்வு

இலங்கையில் சமையலுக்குப் பயன்படும் லிட்ரோ எரிவாயு உருளை விலை ரூ.5.175 ஆக உயர்த்தப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
Published on


கொழும்பு: இலங்கையில் சமையலுக்குப் பயன்படும் லிட்ரோ எரிவாயு உருளை விலை ரூ.5.175 ஆக உயர்த்தப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

வீடுகளில் சமையலுக்குப் பயன்படும் 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு உருளை விலை உயர்வானது இன்று இரவு முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எரிவாயு உருளை விலை தற்போது ரூ.2,500 அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு உருளை விலை ரூ.2.675 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரூ.2,500 உயர்த்தப்பட்டு நாளை முதல் ரூ.5.175க்கு விற்பனையாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 70 சதவீத மக்கள் எரிவாயு உருளையைப் பயன்படுத்தாமல் விறகு அடுப்புக்கு மாறிவிட்டதாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் இழப்பை ஈடுகட்டும் வகையில் விலை உயர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com