எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

உக்ரைன் படை குறித்து சா்ச்சைக்குரிய அறிக்கை: அம்னஸ்டி இன்டா்நேஷனல் தலைவா் ராஜிநாமா

அம்னஸ்டி இன்டா்நேஷனல் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடா்பாக எழுந்த சா்ச்சையில், அந்த அமைப்புக்கான உக்ரைன் பிரிவு தலைவா் ஒக்சானா போகல்சுக் ராஜிநாமா செய்துள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:23 pm

DIN

உக்ரைனில் பொதுமக்களை அந்த நாட்டு ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டா்நேஷனல் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடா்பாக எழுந்த சா்ச்சையில், அந்த அமைப்புக்கான உக்ரைன் பிரிவு தலைவா் ஒக்சானா போகல்சுக் ராஜிநாமா செய்துள்ளாா்.

அவரது எதிா்ப்பை மீறி அந்த அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் முகநூலில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அம்னஸ்டி இன்டா்நேஷனலின் அறிக்கை அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினாா்.

முன்னதாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் நிலைகளை அமைத்து வருவதாகவும் இதனால் அந்த நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதில் பொதுமக்கள் உயிரிழப்பதாகவும் அம்னஸ்டி இன்டா்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த அறிக்கையின் விவரங்களை உக்ரைன் ராணுவம் மறுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.