கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைக்கும் காவலாளி: சிசிடிவியால் கிடைத்த நீதி

பாகிஸ்தானில் சாலையோரம் கர்ப்பிணிப் பெண்ணை காவலாளி ஒருவர் எட்டி உதைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைக்கும் காவலாளி
கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைக்கும் காவலாளி


பாகிஸ்தானில் சாலையோரம் கர்ப்பிணிப் பெண்ணை காவலாளி ஒருவர் எட்டி உதைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த விடியோ அடிப்படையில் காவலாளி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டில் காராச்சியின் கிழக்குப் பகுதியிலுள்ள குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காவலாளியிடம் முறையிட்டுள்ளார். 

இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, ஆத்திரமடைந்த காவலாளி கர்ப்பிணிப் பெண்ணை கன்னத்தில் அறைந்ததில் கர்ப்பிணிப் பெண் நிலை தடுமாறி கீழே விழுகிறார். 

பின்னர், எழ முயற்சிக்கும்போது, காவலாளி கர்ப்பிணிப் பெண்ணின் முகத்தில் காலணியுடன் உதைக்கிறார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதனைப் பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தனது சுட்டுரையில் பகிர்ந்து, பெண்ணிடம் வன்முறையில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு கோரிக்கை வைத்து பதிவிட்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்து, விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com