மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரும், ரஷிய சித்தாந்தவாதியான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா மாஸ்கோவின் புறநகர் பகுதியில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து ரஷிய விசாரணைக் குழு கூறுவதாவது: அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்ய வேண்டிய காரில் கடைசி நேரத்தில் அவரது மகள் டாரியா டுகினா பயணம் செய்துள்ளார். இந்நிலையில், மாஸ்கோவின் புறநகர் பகுதியான 40 கி.மீ தொலைவில் உள்ள போல்ஷி வைசியோமி கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் டாரியா டுகினா பலியானதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
டாரியா டுகினா 1992 ஆம் ஆண்டு பிறந்தவர்.
டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் பலியானது குறித்து விசாரணை நடத்த புதின் உத்தரவிட்டுள்ளார்.
டாரியா டுகினாவின் பலி ரஷியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டுகினாவின் கார் குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
புதின் மூளையாகவும், உக்ரைன் மீதான ரஷிய நடவடிக்கைகளுக்கு பின்னால் அலெக்சாண்டர் டுகின் இருப்பதாக கூறப்படுவதால் அவருக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! எஸ்சி ஆணையத்தில் மன்னிப்பு கோரிய மத்திய அமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



