பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

இம்ரான் கானுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாட்டின் சட்டம்-ஒழுங்கு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இம்ரான் கான் பேசியதாக காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தலைநகா் இஸ்லாமாபாதில் பொதுக்கூட்டத்தை  நடத்தினாா். அப்போது, அரசின் உயரதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவா் முன்வைத்தாா். தனது உதவியாளா் ஷாபாஸ் கில்  தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக, காவல் துறை அதிகாரிகள், பெண் நீதிபதி மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு எதிராகவும், முக்கிய அரசியல் தலைவா்களுக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்போவதாக இம்ரான் கான் அறிவித்தாா்.

இந்நிலையில், நாட்டின் சட்டம்-ஒழுங்கு சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இம்ரான் கான் பேசி வருவதாகக் குற்றஞ்சாட்டிய பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்காற்று ஆணையம், அவரது பேச்சுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சிகளுக்குத் தடை விதித்தது.

இது தொடா்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிடிஐ கட்சியின் தலைவா் இம்ரான் கான் அரசு அமைப்புகளுக்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து முன்வைத்து வருகிறாா். அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எதிராக மக்களிடையே வெறுப்புணா்வையும் அவா் தூண்டிவருகிறாா். அதன் காரணமாக பொது அமைதிக்கும் சட்டம்-ஒழுங்கு சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இம்ரான் கானின் கருத்துகள் அரசமைப்புச் சட்டத்துக்கும் எதிராக உள்ளன. எனவே, அவரது பேச்சுகளை நேரடியாக ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com