நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘சினூக்’ ஹெலிகாப்டரை நிறுத்தியது அமெரிக்க ராணுவம்: இந்தியா?

சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை அமெரிக்க ராணுவம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2022, 7:37 am

DIN

சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை அமெரிக்க ராணுவம் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை பல்வேறு அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை அடுத்து அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டில் உள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களையும் பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் அமெரிக்க ராணுவம் நிறுத்துவதற்கான முழு விவரங்களை அளிக்குமாறு போயிங் நிறுவனத்திடம் இந்திய தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அளிக்கும் விளக்கத்திற்கு பிறகு, இந்திய விமானப் படையும் சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.