2023-ல் 14 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நிகழும்: ஆய்வில் அதிர்ச்சி

சீனாவில் அடுத்து வரும் 2023ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் கரோனா மரணங்கள் நிகழலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சீனாவில் அடுத்து வரும் 2023ஆம் ஆண்டு சுமார் 14 லட்சம் கரோனா மரணங்கள் நிகழலாம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் கடந்த மாதம் தினசரி நோயத்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டது. அதன் விளைவாக, அங்கு நோய் பரவல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளா்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குரூப்ஸ் புரொஜக்‌ஷன் ஆய்வுக் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு எப்ரல் மாதம் சீனாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும். இறப்பவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும். சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து கரோனா மரணங்களை சுகாதாரத் துறை அறிவிப்பதில்லை. கடைசியாக டிசம்பர் 3ஆம் தேதி நிகழ்ந்த கரோனா மரணங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் சா்ச்சைக்குரிய ‘பூஜ்ய கரோனா’ கொள்கை தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக தற்போது கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த சந்திர புத்தாண்டில் கரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை 1.4 மில்லியன் (14 லட்சம்) அதிகரிக்கும். 

சீனாவில் வரும் ஜனவரி மாதத்துக்குள் முதியவர்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என 60 சதவிகிதம் மக்கள் கரோனாவால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com