ஆப்கனில் கல்லூரி செல்ல பெண்களுக்குத் தடை! பாகிஸ்தான் கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசு பெண்களின் உயர்கல்வி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.
ஆப்கனில் கல்லூரி செல்ல பெண்களுக்குத்  தடை! பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரி செல்லத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்களின் உயர்கல்வி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

தலிபான் ஆட்சியாளர்கள் கடந்த செவ்வாய்கிழமையன்று நாடு முழுவதும் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்வியை தடை செய்தனர்.  இது பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரத்தை நசுக்கும் விதமாக உள்ளது.

கடந்த ஆண்டு அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரியாவின் கடுமையான நெறிமுறைகளை அவர்கள் வலுவாக நடைமுறைப்படுத்தினர்.

ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகம் மற்றும் பெண் மாணவர்களுக்கான உயர்கல்வி நிறுத்தப்பட்டது குறித்த அறிந்து பாகிஸ்தான் ஏமாற்றமடைகிறது என்று பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவாகவும், நிலையானதாகவும் உள்ளது என்றார்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இஸ்லாமிய கட்டளைகளுக்கு இணங்க கல்வி கற்கும் உள்ளார்ந்த உரிமை உண்டு என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  அதே வேளையில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com