2100-ஆம் ஆண்டில் பென்குவின் அழிந்து போகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
2100-ஆம் ஆண்டில் பென்குவின்  அழிந்து போகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Published on
Updated on
1 min read

பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது: சிறிய அளவிலான தொகையினை ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து செலவு செய்து வந்தால் அண்டார்டிகாவில் உள்ள 84 சதவிகித நிலவாழ் பறவைகள், உயிரினங்கள் மற்றும் தாவர குழுக்கள் காப்பாற்றப்படும். பருவநிலை மாற்றம் அண்டார்டிகாவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்தை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் மிகவும் குளிரான, அதிக காற்று போன்றவற்றைத் தாங்கி வாழ்வதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. உரிய கவனம் கொடுக்கப்படாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள பென்குவின் உட்பட பல உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது.


மனித குலத்துக்கு விலைமதிப்பற்ற சேவைகளை அண்டார்டிகா வழங்கி வருகிறது. உலக பருவநிலையை சம நிலையில் வைப்பதற்கு அண்டார்டிகா பெரிதும் உதவுகிறது. அண்டார்டிகா வெப்பம் மற்றும் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டும் உதவி புரிகிறது. நம்மில் பலர் அண்டார்டிகா சில உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வாழிடமாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருகின்றன. உலக பருவநிலை மாற்றத்தினால் அண்டார்டிகாவில் உள்ள பனி தொடர்ந்து உருகி வருகிறது. இதனால், அண்டார்டிகாவில் உள்ள பனி நிலப்பரப்பு குறைந்து வருகிறது. அனல் காற்று போன்றவை அண்டார்டிகாவில் வீச ஆரம்பித்துள்ளது.


இதே நிலை நீடித்தால் 2100 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித உயிரினங்களின் வெகுவாக குறைந்து விடும். குறிப்பாக அண்டார்டிகாவில் உள்ள எம்பெரர் பென்குவின் 2100 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலிருந்து அழிந்து போகும் அபாயம்  உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com