அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கரோனா

கரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலமாக மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

News image
ஜஸ்டின் ட்ரூடோ
Updated On :2 பிப்ரவரி 2022, 11:38 am

DIN

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலமாக மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, லாரி டிரைவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் அவா்கள் தலைநகா் ஒட்டவாவில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, அது அரசின் கரோனா தடுப்புக் கொள்கைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.

போராட்டங்கள் வலுவடைந்து வருவதையடுத்து, பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினா் பாதுகாப்பான ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.