அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடும் உயர்வு

கடந்த ஓராண்டில் மட்டும், அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடும் உயர்வு
அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடும் உயர்வு
Published on
Updated on
1 min read


வாஷிங்டன்: கடந்த ஓராண்டில் மட்டும், அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அங்கு மட்டும் இதுவரை 7.53 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.90 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் எடுத்துக் கொண்டால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சராசரியாக ஒரு நாளைக்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,400 என்ற அளவில் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் பலரும், அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவும், ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்திருப்பதும் இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

ஒமைக்ரான் அலை இன்னமும் நாட்டில் உச்சமடையவில்லை. இன்னும் இரண்டு வாரத்தில் உச்சமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com