வேகமாக பரவுகிறது புதிய வகை பி.ஏ.2 ஒமைக்ரான்: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பி.ஏ.2 வகை ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. 
கோப்புப்பட
கோப்புப்பட


ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பி.ஏ.2 வகை ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் அதாவது 10 வாரங்களுக்கு முன்பு மிக வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இவை உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ஒமைக்ரான் பி.ஏ.1 வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த பி.ஏ.2 வகை ஒமைக்ரான் தற்போது உலகில் வேகமாக பரவி ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. 

வேகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பி.ஏ.1 வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த பி.ஏ.2 வகை ஒமைக்ரான் தற்போது 57 நாடுகளுக்‍கு பரவியுள்ளதாகவும், இவை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாத வகையில் ஆபத்தானதாக இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, மேலும் இது நம் கண் முன்னே தொடர்ந்து உருமாறி உருவாகி வருகிறது. ஒமைக்ரான் மாறுபாட்டின் நான்கு துணை வகை தொற்றினை உலக சுகாதார நிறுவனம் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

மேலும் உருமாற்றம் அடைந்து வரும் ஒமைக்ரான் வகையிலான தொற்றின் வேறுபாடுகள் குறித்து இன்னும் அதிகம் அறியப்படவில்லை என்றும், அதன் பரவும் தன்மை, நோயெதிர்ப்பு பாதுகாப்புகள் மற்றும் அதன் வீரியம், அதன் பண்புகள் உள்ளிட்ட குறித்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும், ஒமைக்ரானை விட பி.ஏ.2 வகை ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

டெல்டா போன்ற பேரழிவை ஏற்படுத்திய முந்தைய கரோனா வைரஸ் வகைகளை விட ஒமைக்ரான் பொதுவாக குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாக அறியப்பட்டாலும், பி.ஏ.2 வகை ஒமைக்ரானின் "தீவிரத்தன்மையில் மாற்றம் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை" என்று கூறப்படுகிறது. 

மேலும் உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரஸில் 96 சதவிகித வைரஸ்கள் பி.ஏ.1 வகை என்றும், ஒமைக்ரான் பல நாடுகளில் இன்னும் உச்சத்தை எட்டவில்லை என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

எவ்வாறாக இருப்பினும், கரோனா ஒரு ஆபத்தான நோயாகவே உள்ளது என்றும், மக்கள் அதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்றும்,  கரோனா தடுப்பூசிகள், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி, கைகழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுதலே வைரஸை எதிர்த்துப் போராட உதவும் பயனுள்ள கருவிகள் என்று உலக சுகாதார மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com