பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

‘உக்ரைன் மீது ரஷியா விரைவில் தாக்குதல்’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஓரிரு நாள்களில் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

News image

‘உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம்’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Updated On :17 பிப்ரவரி 2022, 3:26 pm

DIN

ஓரிரு நாள்களில் ரஷியா உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

இந்நிலையில் நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான எண்ணிக்கையில் படையினரை ரஷியா குவித்து வந்தது.

இதனால் இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் உக்ரைன் எல்லை அருகே படைகளை திரும்பபெற்றதாக ரஷியா அறிவித்துள்ளது. ரஷியாவின் இந்த அறிவிப்பு பொய்யானது என அமெரிக்கா குற்றம்சாட்டி வரும்நிலையில் அடுத்த ஓரிரு நாள்களில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த விவகாரத்தில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தையில் இனி ஈடுபடப்போவதில்லை எனவும் பைடன் அறிவித்துள்ளார். 

அதேசமயம் ரஷியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அமெரிக்கா இதுவரை வெளியிடாத நிலையில் சர்வதேச அளவில் இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.