பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தயார் நிலையில் 50 சதவிகித ரஷிய படைகள்...மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்கா

உக்ரைன் எல்லையில் 125 திட்டமிடும் பட்டாலியன் ராணுவ குழுவை ரஷியா குவித்துள்ளது. சாதாரண நேரங்களில், 60 குழு மட்டுமே அங்கு நிலைநிறுத்தப்படும்.

News image

கோப்புப்படம்

Updated On :19 பிப்ரவரி 2022, 6:29 am

DIN

உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள 40 சதவிகிதத்திற்கும் மேலான ரஷிய படை தாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 1,50,000க்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷியா அங்கு நிலைநிறுத்தியுள்ளது என அமெரிக்கா கணித்துள்ளது. புதன்கிழமையிலிருந்து குறிப்பிடத்தக்க ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கவனித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், "நாற்பது முதல் ஐம்பது சதவீதம் வீரர்கள் தாக்குவதற்கான நிலையில் உள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில், எல்லைக்கு அருகே தாக்குவதற்காக நிலைநிறுத்தப்படும் பகுதியில் ராணுவ குழுவை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

உக்ரைன் எல்லையில் பிப்ரவரி தொடக்கத்தில் 80 திட்டமிடும் பட்டாலியன் ராணுவ குழுவை ரஷியா குவித்திருந்தது. இது தற்போது 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண நேரங்களில், 60 குழு மட்டுமே அங்கு நிலைநிறுத்தப்படும்.

உக்ரைனின் தென்கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷிய சார்பு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் அரசாங்கப் படைகளுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதும், ரஷிய, டான்பாஸில் உள்ள அதிகாரிகளின் எரிச்சலூட்டும் கூற்றுக்கள் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கான பிரசாரம் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது" என்றார்.

உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லை பகுதியில் ஏதேனும் சம்பவத்தை ரஷியா தூண்டுவிடலாம் என அமெரிக்க கடந்த சில வாரங்களாகவே எச்சரித்துவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.