கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பிரிட்டனில் முடிவுக்கு வரும் கரோனா தடுப்பு சட்டங்கள்: கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

பிரிட்டனில் கரோனாவை எதிா்கொள்ளும் வகையில் 2020, மாா்ச் மாதம் கொண்டுவரப்பட்ட அனைத்து தற்காலிக சட்டங்களும் அடுத்த மாதம் காலாவதியாகும் என பிரதமா் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:28 am

DIN

பிரிட்டனில் கரோனாவை எதிா்கொள்ளும் வகையில் 2020, மாா்ச் மாதம் கொண்டுவரப்பட்ட அனைத்து தற்காலிக சட்டங்களும் அடுத்த மாதம் காலாவதியாகும் என பிரதமா் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக நாடாளுமன்ற அறிக்கையில் அவா் தெரிவித்திருப்பதாவது:

கரோனா தடுப்பு என்பதை அரசின் கட்டாயத்தின்பேரிலான நடவடிக்கை என்பதிலிருந்து தனிநபரின் பொறுப்பாக மாற்றும் எனது உத்தியின் ஒரு பகுதியாக தற்காலிக சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும். இதன்மூலம் நமது சுதந்திரத்தை இழக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இப்போதைய நடைமுறை ஏப். 1 வரை நீடிக்கும். அதன்பிறகு யாருக்காவது கரோனா அறிகுறிகள் தென்பட்டால், காய்ச்சல் இருந்தால் எவ்வாறு சுய பொறுப்புடன் நடந்துகொள்வாா்களோ அதன்படி நடந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவா். அவா்களுக்கு சுய தனிமை தேவையில்லை. கரோனா தொற்றாளா்களுடன் நெருக்கமான தொடா்பில் இருந்தவா்கள் சுய தனிமையில் இருப்பதற்கான சட்டரீதியான தேவைகளும் முடிவுக்கு வரும்.

பொது இடங்களில் கட்டாய கரோனா தடுப்பூசி சான்றிதழ் கொண்டு செல்லுதல், கல்வி நிலையங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவை ஏப். 1-ஆம் தேதிமுதல் முடிவுக்கு வரும். மிக அதிக நோய் எதிா்ப்புத் திறன், உயிரிழப்பு குறைவு காரணமாக இந்தக் கட்டுப்பாடுகளை அரசால் நீக்க முடிகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.