கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உக்ரைன் விவகாரம்: ரஷியாவுக்கு ஆதரவு தெரிவித்த சீனா?

உக்ரைன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் ரஷிய நடவடிக்கை குறித்த வெளிநாட்டு பத்திரிகையாளரின் கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
சீன அதிபர் ஜி சின்பிங்
Updated On :24 பிப்ரவரி 2022, 8:50 am

DIN

கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.

30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சம் தெரிவித்து வருகிறது. எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரா்களை ரஷியா குவித்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், புதின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டு ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்-இல் தனது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அமைதி காக்க வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. 

ரஷிய படையெடுப்பு என்ற வெளிநாட்டு பத்திரிகையாளரின் கருத்துக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற தினசரி செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.