உக்ரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை

ரஷிய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது உக்ரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. 
உக்ரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை


ரஷிய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது உக்ரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. 

கடந்த 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறியபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் தன்னை தனி நாடாக அறிவித்துக் கொண்டது. அந்த நாடு ரஷியாவின் அண்டை நாடாக உள்ளது.

இந்நிலையில் 30 நாடுகள் அடங்கிய நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு ரஷியா தொடர்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அது ரஷியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷியா அச்சம் தெரிவித்து வருகிறது. எனவே, உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும் அதற்கு அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் உடன்படவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் படை வீரா்களை ரஷியா குவித்துள்ளது. இந்த நடவடிக்கை உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கவுள்ளதை புலப்படுத்துவதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும், ரஷிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் தலையீடும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரித்துள்ளார். 

புதின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டு ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ்-இல் தனது குண்டு மழை பொழியத் தொடங்கியுள்ளது.

மேலும் கிழக்கு உக்ரைனிலும் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com