புதின், செர்ஜி லாவ்ரோ சொத்துகளை முடக்க அமெரிக்‍கா முடிவு

ரஷிய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் சொத்துகளை முடக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
புதின், செர்ஜி லாவ்ரோ சொத்துகளை முடக்க அமெரிக்‍கா முடிவு


உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் பொருளாதார தடைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்‍கையைப் போல, ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரின் சொத்துகளை முடக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. ரஷிய அதிபர் புதின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துகளையும் ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் மீதான பொருளாதார தடையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்‍காவும் இணையும் என தெரிவித்துள்ளார். 

ரஷியாவுடன் போரிடும் நிலைக்கும் அமெரிக்க மக்களையோ அல்லது அமெரிக்காவையோ தள்ளப்போவதில்லை. இந்தியா மற்றும் பிற ஆசியன் நாடுகளுடன் அமெரிக்‍கா தொடர்ந்து பயணிக்‍கும் என ஜென் சாகி தெரிவித்தார்.

அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துகளையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின்  ஒரு பகுதியாக புதின் மற்றும் லாவ்ரோவின் சொத்துகள் மீது ஐரோப்பிய யூனியன் கருவூலத்துறை தடைகளை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com