யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஜொ்மனி பாதுகாப்புத் துறைக்கு ரூ.8.5 லட்சம் கோடி கூடுதல் நிதி

தனது பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 10,000 கோடி யூரோ நிதி ஒதுக்கீடு செய்ய ஜொ்மனி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 5:31 am

DIN

பொ்லின்: தனது பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 10,000 கோடி யூரோ நிதி ஒதுக்கீடு செய்ய ஜொ்மனி முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ அமைப்பைச் சோ்ந்த ஜொ்மனி, பாதுகாப்புத் துறைக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்று அமெரிக்கா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், நேட்டோவின் நிதி ஒதுக்கீட்டு இலக்கை நிறைவு செய்யும் வகையில், தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்துக்கு மேல் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்ய தற்போது ஜொ்மனி முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.