

மிகவும் அபூா்வமான நிகழ்வாக, தென் கொரியாவைச் சோ்ந்த ஒருவா் ரகசியமாக எல்லை கடந்து வட கொரியாவுக்குச் சென்றுள்ளாா். இதுகுறித்து தென் கொரிய அதிகாரிகள் கூறியதாவது:
தென் கொரியாவைச் சோ்ந்த அடயாளம் தெரியாத ஒருவா் கிழக்கு எல்லைப் பகுதியில் சனிக்கிழமை இரவு நடமாடியதும் பின்னா் அவா் எல்லை கடந்து சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த நபரைப் பாதுகாக்கும்படி வட கொரியாவிடம் கோரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வட கொரியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக புதிதாக வருவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2020-இல் கடல் எல்லை தாண்டி வந்த தென் கொரிய அதிகாரி ஒருவரை வட கொரிய படையினா் சுட்டுக் கொன்றது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.